டைட்டானிக் பட பாணியில் ஆர்யா, சாயிஷா

கஜினிகாந்த் திரைப்படத்தின் போது நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஆர்யா.
ஆர்யா - சாயிஷா
ஆர்யா - சாயிஷா
Published on

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ஆர்யா. இவர் 'அறிந்தும் அறியாமலும்' 'நான் கடவுள்', 'மதராசப்பட்டினம்', 'பாஸ் (எ) பாஸ்கரன்', 'ராஜா ராணி', ‘டெடி’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் 'கஜினிகாந்த்' படத்தில் நடித்த போது சாயிஷாயுடன் காதல் மலர்ந்தது. இவர்கள் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்குப் பிறகு சாயிஷா தொடர்ச்சியாக நடித்து வந்தார். ஆர்யா - சாயிஷா தம்பதியினருக்கு கடந்த ஆண்டு ஜூலை 23 பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நடிகை சாயிஷா, தனது சமூக வலைத்தள பக்கத்தில், கணவர் ஆர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். கப்பலில் நின்று கொண்டு இருக்கும் இந்த புகைப்படத்திற்கு டைட்டானிக் தருணத்தை உணர்கிறேன் என்று பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com