கவனம் ஈர்க்கும் அருண் விஜய் பட வீடியோ

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் 'யானை'.யானை திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அருண் விஜய்
அருண் விஜய்
Published on: 

அருண் விஜய்யின் 33-வது படம் 'யானை'. ஹரி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்து பின்னணியில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.

யானை
யானை

யானை

இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'யானை' படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com