மீண்டும் உடல் எடையை அதிகரிக்கும் அனுஷ்கா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை அனுஷ்கா.இவர் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை அதிகரித்தார்.
அனுஷ்கா 
அனுஷ்கா 
Published on

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா.

இவர் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இஞ்சி இடுப்பழகி

இந்நிலையில், அனுஷ்கா மீண்டும் உடல் எடையை அதிகரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இவர் தமிழில் ஒரு படமும் தெலுங்கில் ஒரு படமும் நடிக்க தயாராக இருந்த நேரத்தில் தெலுங்கு இயக்குனர் ஒருவர் சொன்ன கதை பிடித்து போய் அந்த கதாபாத்திரத்திற்காக உடல் எடையை அதிகரிக்க சம்மதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அப்டேட் அனுஷ்கா ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com