உதவி இயக்குனரை 2-வது திருமணம் செய்தார் நடிகர் அஞ்சலி நாயர்

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் அஞ்சலி நாயர் உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டார்.
கணவருடன் அஞ்சலி நாயர்
கணவருடன் அஞ்சலி நாயர்
Published on

பிரபல மலையாள நடிகை அஞ்சலி நாயர். இவர் தமிழில், நெல்லு, கோட்டி, உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்துபோகும், நீ நான் நிழல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். பெண், புலிமுருகன், திரிஷ்யம்-2 ஆகிய படங்களில் அஞ்சலி நாயரின் நடிப்பு பேசப்பட்டது. 

அஞ்சலி நாயர் ஏற்கனவே அனீஷ் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆவ்னி என்ற பெண் குழந்தை உள்ளது. பின்னர் கணவருடன் அஞ்சலி நாயருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். இதையடுத்து மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் அஜித் ராஜு என்பவருடன் அஞ்சலி நாயர் நெருக்கமாக பழகுவதாக தகவல் பரவி வந்தது. 

இந்த நிலையில் அஜித் ராஜுவை அஞ்சலி நாயர் 2-வது திருமணம் செய்து கொண்டார். திருமணமான தகவலை அஜித் ராஜு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அஞ்சலி நாயருக்கு, நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com