தயாரிப்பாளர் அன்புசெழியன் இல்ல திருமண விழாவில் கலந்துக் கொண்ட கமல், ரஜினி

கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் அன்புசெழியனின் இல்ல திருமண விழா சென்னையில் நடைபெற்றது.
மணமக்களை வாழ்த்திய ரஜினி
மணமக்களை வாழ்த்திய ரஜினி
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர், கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் அன்புசெழியனின் இல்ல திருமண விழா இன்று 21 பிப்ரவரி 2022 காலை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

மணமக்கள் சுஷ்மிதா  MBA -  மணமகன் R.சரண் MBA , இருவரையும், தமிழ் சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர் போனிகபூர், பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி, அருள்பதி, எல்ரெட்குமார், நடிகர் நாசர், வைபவ், சுப்பு பஞ்சு, அம்மா சிவா, மனோபாலா, மயில்சாமி, இயக்குனர்கள் லிங்குசாமி, சுசிகணேசன், சரண், ரோகிணி தியேட்டர் பன்னீர் செல்வம் ஆகிய பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

மேலும் அரசியல் பிரமுகர்களான தங்கம் தென்னரசு, சேகர் பாபு, டிடிவி.தினகரன், எஸ்.வி.சேகர், ராணிபெட் காந்தி, கு.பிச்சாண்டி, விவி.ராஜன் செல்லப்பா, R B உதயகுமார், வாணதி சீனிவாசன், செல்லூர் ராஜு, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், எல்.கே.சுதீஷ், ஆகியோர் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com