நிர்வாணமாக நடித்த எனக்கு உதட்டு முத்தம் தருவது பெரிய விஷயம் அல்ல -அமலாபால்

பிரித்விராஜ் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.
அமலாபால்
அமலாபால்
Published on

தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரித்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் தற்போது ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்யாமின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.

ஆடு ஜீவிதம்

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சவுதி அரோபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஓட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம். பிரித்விராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த டிரைலரில் இடம்பெற்றிருந்த பிரித்விராஜ், அமலாபால் உதட்டு முத்தம் காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து அமலாபால் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

ஆடு ஜீவிதம்

அவர் கூறியதாவது, இந்த படத்தின் கதையை சொல்லும் போதே பிரித்விராஜ், உதட்டு முத்தக்காட்சி பற்றி விளக்கமாக கூறினார். படத்திற்கும், கதைக்கும் அந்த முத்தக்காட்சி மிகவும் அவசியம் என்பதால்தான் நான் நடித்தேன். மேலும், கதைக்கு தேவை என்பதற்காக நிர்வாணமாகவே நடித்திருக்கிறேன். உதட்டு முத்தம் கொடுப்பது எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com