சமூகவலைதள விளம்பரத்துக்கு ரூ.1 கோடி வாங்கும் ஆலியாபட்

இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியாபட்இவர் விளம்பரத்திற்கு ஒரு கோடி ரூபாய் வாங்குகிறார்.
ஆலியாபட்
ஆலியாபட்
Published on

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட். உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் "டார்லிங்ஸ்". இயக்குனர் ஜஸ்மீட் கே ரீன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷேபேலி ஷா, விஜய் வர்மா, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.

ஆலியாபட்

பிரபல நடிகைகள் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் சமூகவலைதளப் பக்கத்தில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தனியார் தயாரிப்புகளுக்கும் திரைப்படங்களின் விளம்பரத்திற்கும் இந்த பக்கத்தை பயன்படுத்தி  வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகை ஆலியாபட் சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு படத்தை விளம்பரம் செய்ய ஒரு கோடி ரூபாய் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு விளம்பரத்திற்கு ஒரு கோடியா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com