ஏகே61 பட டைட்டில் இதுதான்- போஸ்டருடன் விரைவில் வெளியிட முடிவு?

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் படம் 'ஏ.கே.61'.இப்படத்தின் தலைப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்
அஜித்
Published on

அஜித் 'வலிமை' படத்திற்குப் பிறகு தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித் 
அஜித் 

அஜித் 

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இடைவெளியில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்ற அஜித் சென்னை திரும்பியதும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

ஏ.கே.61 
ஏ.கே.61 

ஏ.கே.61 

சில தினங்களாக நடிகர் அஜித் இமயமலையைச் சுற்றியுள்ள இடங்களுக்கு பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த இமயமலை பைக் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் அஜித் ஏ.கே. 61 படத்தில் பணியில் ஈடுபடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஏ.கே.61
ஏ.கே.61

ஏ.கே.61

இந்நிலையில் ஏகே61 படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு "துணிவே துணை" என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்குமுன்பு கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்திற்கு "துணிவே துணை" என்ற தலைப்பு வைக்க பரிசீலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com