அஜித் அடுத்த படத்தின் புதிய அப்டேட்

வலிமை படத்தை தொடர்ந்து அடுத்து நடிக்கவிருக்கும் அஜித் 61-வது படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன்ர்.
அஜித்
அஜித்
Published on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் இவர்கள் கூட்டணியில் வலிமை படம் தயாராகி திரைக்கு வந்தது. இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதிகமான பைக் காட்சிகள், அம்மா சென்டிமெண்ட் தூக்கல் என கலவையான விமர்சனங்கள் படத்திற்கு எழுந்திருந்த போதிலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்தனர். வலிமை படம் வெளியான 3 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.

அஜித்

இந்த நிலையில் அடுத்து மூன்றாவது முறையாக வினோத் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இது அவருக்கு 61-வது படம். இதற்கு இசையமைக்க ஜிப்ரான் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தேதி தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி படத்தின் பூஜை மார்ச் 9-ஆம் தேதி எனவும் படப்பிடிப்பு மார்ச் 18-ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com