வா செந்தாழினி.. கவனம் ஈர்க்கும் ஜி.வி.பிரகாஷ் படத்தின் முதல் பாடல்

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 'அடியே'.இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
அடியே
அடியே
Published on

ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார்.

அடியே

சமீபத்தில் 'அடியே' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'வா செந்தாழினி' பாடல் இன்று (மே 26-ம் தேதி) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பகவதி பி.கே வரிகளில் சித்ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடல் இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com