வைரலாகும் வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்த புகைப்படம்

தெலுங்கில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் லாவண்யா திரிபாதி -வருண் தேஜ்.இவர்கள் இருவருக்கும் ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி
வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி
Published on

தமிழில் சசிகுமாருடன் 'பிரம்மன்', சந்தீப் கிஷனுடன் 'மாயவன்' படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் லாவண்யா திரிபாதி. தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். லாவண்யா திரிபாதியும் தெலுங்கில் இளம் நடிகரான வருண் தேஜூம் 'மிஸ்டர்', 'அந்தாரிக்சம்' ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். அப்போதே காதல் மலர்ந்ததாக செய்திகள் பரவியது . ஆனால் இதை லாவண்யா திரிபாதி மறுத்திருந்தார்.

இந்நிலையில், இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர். நிச்சயதார்த்தம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே இத்தகவல் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி ஜோடிக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களது திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

வருண் தேஜ் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாகபாபுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com