சப்தம் படக்குழுவுடன் இணைந்த லைலா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான படம் 'ஈரம்'.ஈரம் படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
லைலா
லைலா
Published on

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழ் சினிமாவில் வெளியான ஹாரர் படங்களின் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரன்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமனின் இசையில் 'மழையே மழையே' பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது.

சப்தம்
சப்தம்

சப்தம்

சமீபத்தில் ஈரம் படத்தின் கூட்டணியான இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி மற்றும் இசையமைப்பாளர் தமன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு சப்தம் படக்குழு முதற்கட்ட படப்பிடிப்பை படக்குழு நிறைவு செய்தது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை லைலா இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com