மனோபாலா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்

நடிகர் மனோபாலா உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை வளசரவாக்கம் மயானத்தில் மனோபாலா உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
மனோபாலா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்
Published on

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று பன்முகத்தன்மை கொண்டவரான மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது உடலுக்கு திரை பிரபலங்கள் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் மனோபாலா மறைவை அறிந்து நேரில் வந்த விஜய் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மனோபாலாவின் உடல் நாளை காலை 10.30 மணிக்கு மேல் தகனம் செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com