விரைவில் 4-வது திருமணம்.. பிரபல நடிகையை முத்தமிட்டு உறுதி செய்த சர்ச்சை நடிகர்..

தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பவித்ரா லோகேஷ். பவித்ரா லோகேஷ் விரைவில் நடிகர் நரேசை திருமணம் செய்யவுள்ளார்.
நரேஷ் - பவித்ரா லோகேஷ்
நரேஷ் - பவித்ரா லோகேஷ்
Published on

கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்தவர் பவித்ரா லோகேஷ். திரைப்பட நடிகையான இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். நடிகை பவித்ரா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதுபோல் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரும், நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷ், 2 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். அவர் 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்திருந்தார். தற்போது அவரையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார்.

பவித்ரா லோகேஷ்

இதையடுத்து பவித்ரா லோகேஷ் முதல் கணவரை விட்டு பிரிந்து, நடிகர் நரேசை ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வருவதாக நரேசின் மனைவி ரம்யா ரகுபதி குற்றம்சாட்டியிருந்தார். இதை இருவரும் மறுத்த நிலையில் மைசூருவில் உள்ள ஓட்டலில் இருவரும் தங்கியிருந்தபோது ரம்யா ரகுபதியிடம் வசமாக சிக்கிக்கொண்டனர். இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்கபாய்ந்தார் பின்னர் அவரை போலீசார் சமாதானப்படுத்தினர்.

நரேஷ் - பவித்ரா லோகேஷ்

இந்நிலையில், நடிகர் நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இதனை தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவர் அறிவித்துள்ளார். அந்த வீடியோவில், நடிகை பவித்ராவை முத்தமிட்டு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை கூறி விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com