அவன் - இவன் படம் நானும் ஜீவாவும் பண்ண வேண்டியது.. ஜித்தன் ரமேஷ் பிரத்யேக பேட்டி

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் 'ஃபர்ஹானா'.இப்படத்திற்காக நடிகர் ஜித்தன் ரமேஷ் மாலைமலர் நேயர்களுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
ஜித்தன் ரமேஷ்
ஜித்தன் ரமேஷ்
Published on

'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படம் 'ஃபர்ஹானா'. இதில் ஜித்தன் ரமேஷ், இயக்குனர் செல்வராகவன், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஃபர்ஹானா
ஃபர்ஹானா

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக நடித்த ஜித்தன் ரமேஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜித்தன் ரமேஷ், ஃபர்ஹானா திரைப்படம் குறித்தும் அவரின் திரைப்பயணம் குறித்தும் மாலைமலர் நேயர்களுக்காக பிரத்யேக பேட்டியளித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

மாலைமலருக்கு பேட்டியளித்த ஜித்தன் ரமேஷ்
மாலைமலருக்கு பேட்டியளித்த ஜித்தன் ரமேஷ்

மாலைமலருக்கு பேட்டியளித்த ஜித்தன் ரமேஷ்

அவர் பேசியதாவது, ஃபர்ஹானா திரைப்படத்திற்காக எனக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இனி நான் கதைகளை சரியாக தேர்ந்தெடுத்து நடிப்பேன். தற்போது ஜப்பான் மற்றும் ரூட் நம்பர் 17 படத்தில் நடித்து வருகிறேன். படம் சிறப்பாக இருக்கும் அதே சமயம் வித்யாசமாகவும் இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது அங்கு மிகவும் போர் அடிக்கும். டாஸ்க் நடைபெறும் போது மட்டும் பயங்கர ஜாலியாக இருக்கும்.

ஜித்தன் ரமேஷ்
ஜித்தன் ரமேஷ்

ஜித்தன் ரமேஷ்

அவன் - இவன் படம் நானும் ஜீவாவும் பண்ண வேண்டியது. முதலில் இயக்குனர் பாலா சார் எங்களை அழைத்து தான் பேசினார். அதன்பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை எங்கள் கையை விட்டு சென்று விட்டது. சூப்பர் குட் ஃபிலிம்சின் 100வது படம் கண்டிப்பாக தளபதி விஜய்யை வைத்து தான் பண்ணுவோம் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும் ஜித்தன் ரமேஷின் பிரத்யேக பேட்டியை கீழே காணலாம்:

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com