இது 'அவதார்' தினம் - மகிழ்ச்சியில் தனுஷ் பதிவு

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்'. இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இது 'அவதார்' தினம் - மகிழ்ச்சியில் தனுஷ் பதிவு
Published on

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' இன்று (டிசம்பர்16) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சியமைப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அவதார் -2

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் மொத்தம் 160 மொழிகளில் வெளியானது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அவதார் 2 வெளியானது. இந்தியாவில் இப்படம் முன்பதிவில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேலாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியானது.

அவதார் -2

மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவான 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'இது அவதார் தினம்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com