படப்பிடிப்பிற்கு முன்பே பல கோடிகளுக்கு பிஸ்னஸ் செய்த சூர்யா 46 திரைப்படம்

வெங்கி அட்லூரியின் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.வெங்கி அட்லூரி சூர்யாவின் 46ஆவது படத்தை இயக்க உள்ளார்
படப்பிடிப்பிற்கு முன்பே பல கோடிகளுக்கு பிஸ்னஸ் செய்த சூர்யா 46 திரைப்படம்
Published on

இயக்குனர் வெங்கி அட்லூரியின் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வெங்கி அட்லூரி சூர்யாவின் 46ஆவது படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் அண்மையில் பரவியது. அதனை சமீபத்தில் சூர்யா உறுதி செய்தார். இப்படத்தை சித்தாரா என்டெர்டெய்ண்மென்ட் தயாரிக்கவுள்ளது.

இப்படத்திற்கு சூர்யாவிற்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. திரைப்படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்பே படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் 85 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக  என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திரைப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையாக உருவாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com