கைதி 2 திரைப்படத்தில் மீண்டும் ரோலக்ஸ்சாக வருவேன் - சூர்யா

சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தின் நடித்துள்ளார். வரும் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியன் திரைப்படமாக வெளியாகவுள்ளது.
கைதி 2 திரைப்படத்தில் மீண்டும் ரோலக்ஸ்சாக வருவேன் - சூர்யா
Published on

சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தின் நடித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடித்த திரைப்படம் திரையரங்கிள் வெளியாவதால் கங்குவா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது. திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியன் திரைப்படமாக வெளியாகவுள்ளது.

திரைப்படக்குழு நேற்று விசாகபட்டினத்தில் படத்தை ப்ரோமோட் செய்வதற்காக விழா நடத்தினர். அதில் சூர்யா, இயக்குனர் சிவா, சந்தீப் கிஷன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

அப்பொழுது சூர்யா அவர் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப்போகும் திரைப்படங்களின் தகவல்களை கூறினார். அதில் ஒன்று லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள கைதி 2 திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளேன் மற்றும் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்திற்கான தனி திரைப்படத்திலும் நடிக்கவுள்ளேன் ஆனால் இப்படங்கள் எல்லாம் டிஸ்கஷன் ஸ்டேஜில் உள்ளன விரைவில் இப்படங்களில் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 நடித்து முடித்துள்ளார் மற்றும் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com