சூர்யா vs தனுஷ் .. ஒரே நாளில் போட்டிப்போட்டுக் கொண்டு ரிலீசாகும் படங்கள்

சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சூர்யா vs தனுஷ் .. ஒரே நாளில் போட்டிப்போட்டுக் கொண்டு ரிலீசாகும் படங்கள்
Published on

சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதே நாளில் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com