கங்குவா கிளைமாக்ஸ்: 100 நாட்களில் இயற்கை முறையில் சிக்ஸ் பேக் வைத்த சூர்யா

விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார். கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
கங்குவா கிளைமாக்ஸ்: 100 நாட்களில் இயற்கை முறையில் சிக்ஸ் பேக் வைத்த சூர்யா
Published on

நடிகர் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கங்குவா'. அடுத்த மாதம் ரிலீசாக இருக்கும் இந்த படத்தை நடிகர், சூர்யா பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், ஆந்திர மாநிலத்தில் விளம்பரப்படுத்தும் விதமாக நடிகர் சூர்யா அல்லு சிரிஷ்க்கு அளித்த பேட்டியில் கங்குவா படம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

படம் குறித்து பேசும் போது, "கிளைமாக்ஸ் காட்சியில் பாபி தியோலுடன் மிகப் பெரிய சண்டை காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது. சண்டை காட்சியின் இறுதியில் நான் சட்டையின்றி சண்டையிடும் காட்சி எடுக்கப்பட்டது."

"கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பதற்காக 100 நாட்கள் திட்டமிட்டு, விசேஷ உணவு முறையை (டயட்) பின்பற்றி இயற்கை முறையில் சிக்ஸ் பேக் வைத்தேன். பத்து ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களுக்காக சிக்ஸ் பேக் வைத்து நடித்துள்ளேன். நான் மிகப் பெரிய ஃபுடீ (Foodie) என்பதால் உணவு முறையை பின்பற்றுவது சவாலாக இருந்தது," என்று தெரிவித்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com