மறைந்த இயக்குனர் பாக்யராஜ் குடும்பத்தினருக்கு சூர்யா நேரில் ஆறுதல்

இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை..
Director Bhakyaraj passed away
Published on

மாரடைப்பால் மரணமடைந்த இயக்குனர் பாக்யராஜ் உடல் இன்று நண்பகல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

திரைத்துறைக்கு இயக்குனர் பாக்யராஜ் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தமிழக அரசு சார்பில் இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, கே.பாக்யராஜ் உடலுக்கு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலை வர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் நடிகர்கள் ரஜினி காந்த், கமல்ஹாசன், இயக்கு னர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட திரையுலகினர் ஏராளமானோர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில், இயக்குநர் பாக்யராஜ் மறைவையடுத்து அவரது

இல்லத்திற்கு சென்று மகன் சாந்தனுவுக்கு ஆறுதல் தெரிவித்தார் நடிகர் சூர்யா. பின்னர், பாக்யராஜ்

உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com