சூர்யா - 45 திரைப்படத்தின் தொழில்நுட்ப குழுவை அறிவித்த படக்குழு

சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கிறார்.
சூர்யா - 45 திரைப்படத்தின் தொழில்நுட்ப குழுவை அறிவித்த படக்குழு
Published on

சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சூர்யாவின் 45-வது திரைப்படமாகும் . இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இதனை படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொள்ளவதாக இருந்தது ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. தற்பொழுது படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது கோவையில் நடைப்பெற்று வருகிறது.

படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் படத்தில் ஸ்வசிகா , மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி,அனகா மாயா ரவி நடிக்கவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தனர்.

இதை தொடர்ந்து படத்தின் தொழில்நுட்ப குழுவை படக்குழு தற்பொழுது படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. சண்டை பயிற்சி இயக்குனராக விக்ரம் மோர் மேற்கொள்கிறார். கலை இயக்குனராக அருண் வெஞ்சரமூடு படத்தில் இணைந்துள்ளார். படத்தின் படத்தொகுப்பை ஆர். கலைவாணன் மேற்கொள்கிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com