சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் நாளை காலை வெளியாகவுள்ளது

சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் நாளை காலை வெளியாகவுள்ளது
Published on

சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது என படக்குழு சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் கூறினார். திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு சிரேயா சரண் சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படக்குழு டைட்டில் டீசரை நாளை காலை 11 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்த போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com