கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மகன்... கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்த ஷாலினி!

ஆத்விக்கின் அணி மஹோகனி யூத் லீக் கால்பந்து தொடரில் சாம்பியம் பட்டம் வென்றுள்ளது.
கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மகன்... கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்த ஷாலினி!
Published on

திரைத்துறையைத் தாண்டி கார் பந்தயம், துப்பாக்கிச்சூடு என விளையாட்டுத்துறையிலும் கால்பதித்து தனது பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது கார் பந்தயம் தொடர்பான ஆவணப்படமும் உருவாகி வருகிறது.

இதனிடையே அஜித் மகன் ஆத்விக்கும் கால்பந்து விளையாட்டில் உள்ளது அவரது ரசிகர்கள் பலரும் அறிந்ததே. ஆத்விக் கால்பந்து விளையாடுவது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

இந்நிலையில் ஆத்விக்கின் அணி மஹோகனி யூத் லீக் கால்பந்து தொடரில் சாம்பியம் பட்டம் வென்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை ஷாலினி அஜித்குமார், விளையாட்டின் முடிவைவிட, அதில் கிடைக்கும் மகிழ்ச்சிதான் முக்கியம் என பதிவிட்டுள்ளார்.

மஹோகனி யூத் லீக்

சென்னையில் உள்ள மஹோகனி கால்பந்து கழகம் நடத்தும் இளையோர் கால்பந்துப் போட்டித் தொடர் மஹோகனி யூத் லீக். சிறுவர்கள் மற்றும் இளையோர் பிரிவினரிடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com