அதர்வா நடித்த `நிறங்கள் மூன்று' படத்தின் Sneak Peek நாளை வெளியீடு

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நிறங்கள் மூன்று'.
அதர்வா நடித்த `நிறங்கள் மூன்று' படத்தின் Sneak Peek நாளை வெளியீடு
Published on

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இதில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். சுஜித் சாரங்கின் உதவியாளர் டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் இடையே வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் அதர்வா வெற்றி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் வெற்றி கதாப்பாத்திரத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com