சிவகார்த்திகேயன் 25-வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் 25-வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது
Published on

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் ' அமரன் '. இந்த படம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது . இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார் .இருவரும் எதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியது அதிகம் பாராட்டப்பட்டது.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. இந்த படத்தில் ஜெயம் ரவியும் நடிக்கிறார். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com