`இந்த தடவ மிஸ் ஆகாது' - சிவா நடித்த Sumo படத்தின் ரிலீஸ் தேதி நாளை வெளியீடு

இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார்.
`இந்த தடவ மிஸ் ஆகாது' -  சிவா நடித்த Sumo படத்தின் ரிலீஸ் தேதி நாளை வெளியீடு
Published on

இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார்.

இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.

இந்நிலையில், 'சுமோ' திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்தது ஆனால் சில சூழ்நிலை காரணமாக படத்தை வெளியிட முடியவில்லை. தற்பொழுது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் இந்த தடவை மிஸ்ஸே ஆகாது என தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com