அயலான் இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்- புகைப்படங்கள் வைரல்

இயக்குனர் ஆர்.ரவிக்குமாருக்கு நறுமுகை என்ற மகள் உள்ளார்.குழந்தையை சிவகார்த்திகேயன் மடியில் வைத்திருக்கும் படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
அயலான் இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்- புகைப்படங்கள் வைரல்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது படங்கள் ரசிகர்கள், குழந்தைகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இவரது நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கி இருந்தார்.

இயக்குனர் ஆர்.ரவிக்குமாருக்கு நறுமுகை என்ற மகள் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2வது குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அகரன் என்று பெயர் வைத்துள்ளனர்.

இதை அறிந்த சிவகார்த்திகேயன் இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இல்லத்திற்கு சென்று குழந்தையை பார்த்து வாழ்த்தி உள்ளார்.

இந்நிலையில் குழந்தையை சிவகார்த்திகேயன் மடியில் வைத்திருக்கும் படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

ஆர்.ரவிக்குமாரின் மகனை சிவகார்த்திகேயன் கொஞ்சி விளையாடுவது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com