திருமண வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சித்தார்த்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஹீராமந்தி வெப் சீரிசில் அதிதி ராவ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.ஸ்ரீ ரங்கனாயக்க சுவாமி கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவி வந்தது.
திருமண வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சித்தார்த்
Published on

சமீப காலமாக நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

நேற்று அவர்கள் இருவரும் தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கனாயக்க சுவாமி கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவியது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஹீராமந்தி வெப் சீரிசில் அதிதி ராவ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று இப்படத்தின் வெளியீடும் தேதி அறிவிக்கப்படும் விழாவில் அதிதி ராவ் கலந்துக் கொள்ளவில்லை. அவர் திருமணம் நடப்பதால் அவரால் வர இயலவில்லை என கூறினர், அதனால் தகவல்கள் காட்டு தீப் போல் பரவியது.

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இன்ஸ்டாகிராமில் தங்களுக்கு தற்பொழுது திருமணம் நடக்கவில்லை, நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது என பதிவை பதிவிட்டுள்ளனர். அதில் " ஹீ செட் எஸ் - எங்கேஞ்டு" என்ற தலைப்பில் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com