சர்வானந்த், கிருத்தி ஷெட்டி நடிக்கும் படத்தின் வெளியீட்டு அப்டேட்

நடிகர் சர்வானந்த், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். எங்கேயும் எப்போதும் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடைய பிரபலமானவர். இந்த படத்தை பலே மஞ்சி ரோஜு படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்கியிருக்கிறார்
சர்வானந்த், கிருத்தி ஷெட்டி நடிக்கும் படத்தின் வெளியீட்டு அப்டேட்
Published on

நடிகர் சர்வானந்த், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். எங்கேயும் எப்போதும் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடைய பிரபலமானவர். அதன் பிறகு தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சர்வானந்த் 96 படத்தின் ரீமேக்கான ஜானு, ஸ்ரீஹாரம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து இவர் 'கணம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். கணம் திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவில் வெற்றியைத் தரவில்லை. அதேசமயம் நடிகர் சர்வானந்த் மனமே எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பலே மஞ்சி ரோஜு படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்கியிருக்கிறார். இதில் சர்வானந்த்துக்கு ஜோடியாக கீருத்தி ஷெட்டி நடித்துள்ளார்.

இந்த படமானது லண்டன் ஐதராபாத், போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். முதல் பாடல் வெற்றி பெற்ற நிலையில் படத்தின் அடுத்தப்பாடலான ஓ மனமே பாடலை இன்று மாலை வெளியிடவுள்ளனர். படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com