நீடா அம்பானியுடன் இணைந்து நடனமாடிய ஷாருக்கான், சல்மான்கான் - வீடியோ

ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.
நீடா அம்பானியுடன் இணைந்து நடனமாடிய ஷாருக்கான், சல்மான்கான் - வீடியோ
Published on

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த அம்பானியின் ஆடம்பர திருமணம் நேற்று மும்பையில் நடைபெற்றது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.

நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது.

திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் டோனி, ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திருமண நிகழ்வில் நீட்டா அம்பானியுடன் இணைந்து ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com