

நடிகர் விஜய்யின் மகனானா ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட், சம்பத் ராஜ், ராஜு சுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளப் படம் சிக்மா. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.கே.தமிழ்க்குமரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர், போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றநிலையில், சமீபத்தில் முதல் பாடல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான அய்யய்யோ அம்மாடி நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
முதலில் இப்படம் ஜூலை.31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் ஒத்திவைக்கப்பட்டது.