பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிக்கும் சத்யராஜ்

அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் வெப்பன் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.சத்யராஜ் இந்திய பிரதமரான நரேந்திர மோடியின் பயோபிக்கில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிக்கும் சத்யராஜ்
Published on

தமிழ் சினிமாவின் வெர்சடைல் நடிகர்களுள் சத்யராஜ் முக்கியமானவர். எந்த கதாப்பாத்திரத்தை கொடுத்தாலும் அவருக்கென தனி பாணியில் அந்த கதாப்பாத்திரத்தை வடிவமைத்து நடிப்பார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நேற்று அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் வெப்பன் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில். இன்று மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

சத்யராஜ் இந்திய பிரதமரான நரேந்திர மோடியின் பயோபிக்கில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நரேந்திர மோடியின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சி இது முதல்முறையல்ல 2019 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் முதலில் நரேந்திர மோடியின் வாழ்க்கையை படமாக்கினார் ஆனால் அந்த திரைப்படம் வந்த தடம் கூட தெரியாமல் போனது.

ஆனால் சத்யராஜ் நடிக்கும் படம் ஒரு பான் இந்தியன் படமாக உருவாகவுள்ளது, இந்தாண்டுக்கு படப்பிடிப்பு பணி தொடங்கப்படும் என நம்பப்படுகிறது. படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் .

நாத்திகத்தை பற்றியும், ஆன்மிகத்தில் அதிகம் ஈடுபாடு இல்லாத ஒரு நபர் சத்யராஜ், பெரியாரின் கொள்கையை அதிகம் பின்பற்றுபவர். அவர் எப்படி மோடியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க சம்மத்தித்தார் என நெட்டிசன்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com