கொடைக்கானலில் 8 ஆண்டுகளுக்கு முன்பு தான் நட்டு வைத்த மரத்தை பார்த்து சசிகுமார் பூரிப்பு

நமது குடும்பத்தில் உள்ள உறவுகள் கூட நம்மை மறந்து விடக்கூடும். ஆனால் இயற்கையாக விளங்கும் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்தால் அது உலகிற்கு நன்மை விளைவிக்கும்.
கொடைக்கானல் ஏரிச்சாலையில் 8 வருடங்களுக்கு முன்பு நட்டு வைத்த மரத்தின் முன்பு நடிகர் சசிகுமார் தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
கொடைக்கானல் ஏரிச்சாலையில் 8 வருடங்களுக்கு முன்பு நட்டு வைத்த மரத்தின் முன்பு நடிகர் சசிகுமார் தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
Published on

கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய ஹென்றி லெவிஞ் நினைவு துணை பார்த்து அந்த நினைவு தூணில் உள்ள தகவல்களை தனது செல்போனில் படம் பிடித்தார்.

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு பல்வேறு நாடுகள், பல மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் இங்குள்ள பல்வேறு முக்கிய இடங்களுக்கு சென்று புகைப்படம், வீடியோ எடுத்து செல்வதுடன் தங்கள் நினைவுகளையும் எடுத்து செல்கின்றனர்.

பூரிப்பு

அதன்படி நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏரிச்சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிறுவர் பூங்காவுக்கு வந்தார். ‘சுப்பிரமணியபுரம்’ படப்பிடிப்பின் போது சக நடிகர், நடிகைகள் மற்றும் பல படக்குழுவினருடன் வந்து பல்வேறு இடங்களை பார்வையிட்டு இங்குள்ள பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்திற்கு வந்த நடிகர் சசிகுமார் தான் நட்டு வைத்த மரங்கள் வேகமாக வளர்ந்து அதில் அதிக அளவு பூக்கள் பூத்து இருப்பதை கண்டு பூரிப்படைந்தார்.

மேலும் அந்த மரங்கள் அருகில் நின்று குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதே போல் கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய ஹென்றி லெவிஞ் நினைவு துணை பார்த்து அந்த நினைவு தூணில் உள்ள தகவல்களை தனது செல்போனில் படம் பிடித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், நாம் இந்த உலகில் வாழும்போது சில நினைவுகளை விட்டுச் செல்வோம்.

நமது குடும்பத்தில் உள்ள உறவுகள் கூட நம்மை மறந்து விடக்கூடும் ஆனால் இயற்கையாக விளங்கும் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்தால் அது உலகிற்கு நன்மை விளைவிக்கும். எனவே வாழும் காலங்களில் மரங்களை வளர்த்து இயற்கையை நேசிக்க கற்றுக் கொள்வோம் என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com