தி ஸ்மைல் மேன் படத்தை இயக்குநர்கள் வித்தியாசமாக எடுத்துள்ளனர் - சரத்குமார்

இந்தப் படத்தை இயக்குநர்கள் ஷ்யாம் - பிரவீன் இயக்கியுள்ளனர். சரத்குமாரின் 150வது படமாக தி ஸ்மைல் மேன் உருவாகி இருக்கிறது.
தி ஸ்மைல் மேன் படத்தை இயக்குநர்கள்  வித்தியாசமாக எடுத்துள்ளனர் - சரத்குமார்
Published on

சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது "தி ஸ்மைல் மேன்" (The Smile Man)திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர்கள் ஷ்யாம் - பிரவீன் இயக்கியுள்ளனர். இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சரத்குமார் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்தார்.

இது குறித்து பேசும் போது, "இந்தப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் முதலில் நன்றி. தயாரிப்பாளர் இப்படத்திற்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருந்தார். நன்றி. பிரவீன், ஷ்யாம் மேடையில் கூட ஒன்றாகப் பேசுகிறார்கள். அவர்கள் ஒற்றுமைக்கு இது தான் சான்று. அவர்களுக்கு வாழ்த்துகள். ஒளிப்பதிவாளர் விக்ரம் திறமையானவர். எழுத்தாளர் ஆல்கெமிஸ் புத்திசாலி."

"படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். ராகவன் சார் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார் நன்றி. குழுவினர் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். நல்ல முயற்சி. சுரேஷும் நானும் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. எல்லோரும் போர்த்தொழில் மாதிரி இருப்பதாகச் சொன்னார்கள் ஆனால் இதை இயக்குநர்கள் வித்தியாசமாக எடுத்துள்ளனர். நல்ல முயற்சிக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி," என்று தெரிவித்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com