நரகத்துக்கே ராஜா ஆகணும்.. ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் சொர்கவாசல் ரிலீஸ் வீடியோ

படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்ரத்த கறை படிந்த கைகள் பிச்சை கேட்பது போல் போஸ்டர் வெளியானது
நரகத்துக்கே ராஜா ஆகணும்.. ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் சொர்கவாசல் ரிலீஸ்  வீடியோ
Published on

நடிப்பு, இயக்கம் என பிஸியாக இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி சொர்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிடத்தில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் வித்தியாசமான முறையில் இருந்ததும் ரசிகர்களை கவர்ந்தது. பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள இந்த படம் ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களத்துடன் அமைந்துள்ளது. ஆர்.ஜே பாலாஜி முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரத்த கறை படிந்த கைகள் பிச்சை கேட்பது போல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படத்தின் முக்கிய அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்தது. அதன்படி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் சொர்க்வாசல் படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com