"லவ்வுல இத்தனை கண்டிஷனா"? ரியோ ராஜின் ‘ராம் இன் லீலா’ டிரெய்லர் வெளியீடு!

ஆகஸ்ட் 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளது
RamInLeela Trailer
RamInLeela
Published on

'ஜோ' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ரியோ ராஜ் நடிப்பில், புதுமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராம் இன் லீலா' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று காலை 11:11 மணிக்கு வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

முழுக்க முழுக்க கலர்புல் மற்றும் ரொமாண்டிக் காமெடி பாணியில் இந்த டிரெய்லர் உருவாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி இருக்கு?

ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே, இன்றைய காலகட்டத்தில் மிடில் கிளாஸ் பையன்கள் கல்யாணம் செய்ய எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை "ஒரு லட்சம் சம்பளம், சொந்த வீடு, கொட்டாத முடி, விழாத தொப்பை இதெல்லாம் இருந்தா போதும்ல..." என ரியோவின் நக்கல் வசனத்துடன் டிரெய்லர் ஜாலியாகத் தொடங்குகிறது.

ரயிலில் பார்த்த ஒரு பெண்ணை உருகி உருகி காதலிக்கும் ரியோ, எப்படியாவது அவளைக் கல்யாணம் செய்யத் துடிக்கிறார்.. ஆனால், அந்தப் பெண் ரியோவிடம் ஒரு விசித்திரமான கண்டிஷன் போடுகிறார். "சாயங்காலம் 6 மணிக்கு மேல நீ எங்க போற, என்ன பண்றன்னு யாருக்கும் தெரியல" என்ற வசனங்கள் மூலம் கதையில் ஒரு சுவாரஸ்யமான ட்விஸ்ட் மற்றும் சஸ்பென்ஸ் ஒளிந்திருப்பது போல் காட்டப்படுகிறது.

நட்சத்திரப் பட்டாளம்:

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், ரியோ ராஜுக்கு ஜோடியாக வர்த்திகா அறிமுகமாகிறார்.

இவர்களுடன் காமெடிக்கு உத்தரவாதம் தர முனிஷ்காந்த், மா கா பா ஆனந்த், லொள்ளு சபா சுவாமிநாதன், 'டிஜே பிளாக்' சுதன்குமார், தீபா வெங்கட், சேத்தன் மற்றும் மாளவிகா அவினாஷ் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.

ரிலீஸ் தேதி:

அங்கித் மேனனின் பின்னணி இசையும், அண்மையில் வெளியான 'செப்பு சேலை' போன்ற பாடல்களும் படத்திற்கு கூடுதல் எனர்ஜியைக் கொடுத்துள்ளன.

வரும் ஆகஸ்ட் 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளது. இளைஞர்களையும், குடும்ப ரசிகர்களையும் கவரும் ஒரு பக்கா என்டர்டெய்னராக 'ராம் இன் லீலா' இருக்கும் என ட்ரெய்லர் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com