ரெட்ரோ படத்தின் அடுத்த பாடல் - வெளியான அப்டேட்

ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.ரெட்ரோ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
ரெட்ரோ படத்தின் அடுத்த பாடல் - வெளியான அப்டேட்
Published on

நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடலான 'கண்ணாடி பூவே' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ரெட்ரோ படத்தின் இரண்டாவது பாடல் நாளை (மார்ச் 21) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக இந்தப் படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்பராஜின் பிறந்தநாளை ஒட்டி, இந்தப் படத்தின் பி.டி.எஸ். வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com