ரெட்ரோ:சூர்யா சிங்கிள் டேக் சண்டை பயிற்சி வீடியோ வெளியீடு

நடிகர் சூர்யாவின் 44-வது படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்தார்.
ரெட்ரோ:சூர்யா சிங்கிள் டேக் சண்டை பயிற்சி வீடியோ வெளியீடு
Published on

நடிகர் சூர்யாவின் 44-வது படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்தார். திரைப்படம் கடந்த மே 1 வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியது.

இதுவரை ரெட்ரோ படம் உலக அளவில் ரூ.235 கோடி வசூலில் கடந்துள்ளது. இந்நிலையில் படத்தின் காட்சிகாக சூர்யா சண்டை பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டண்ட் காட்சியை ஜைக்கா ஸ்டண்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com