கலையரசன் - ஆனந்தி நடித்துள்ள ‘டைட்டானிக்’ வெளியீடு தேதி அறிவிப்பு!

அக்டோபர் 16ம் தேதி படம் வெளியாகிறது.
கலையரசன் - ஆனந்தி நடித்துள்ள ‘டைட்டானிக்’ வெளியீடு தேதி அறிவிப்பு!
Published on: 

கலையரசன், ஆனந்தி இணைந்து முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளப் படம் டைட்டானிக். எம். ஜானகிராமன் எழுதி இயக்கிய இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கியது. பின்னர் 2022ஆம் ஆண்டு படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது.

ஆனால், பின்னர் அது ஜூலை 18, 2025-க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இறுதியாக இம்மாதம் 16ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் சி.வி.குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் காளி வெங்கட், மதுமிதா, ஆஷ்னா சவேரி, ராகவ் விஜய், சேத்தன், தேவதர்ஷினி காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com