‘ராம் இன் லீலா’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

படம் குறித்த மற்ற தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ராம் இன் லீலா’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
Published on

ராமச்சந்திரன் கண்ணன் எழுத்து மற்றும் இயக்கத்தில் ரியோராஜ், வர்த்திகா நடிப்பில் உருவாகி வரும் படம் ராம் இன் லீலா. ரவிச்சந்திரன் சுதர்சன் தயாரிக்கும் இப்படத்திற்கு, அங்கித் மேனன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் முனிஷ்காந்த், சேட்டன், நயனா எல்சா, பிரியங்கா நாயர், மாளவிகா அவினாஷ், மாகாபா ஆனந்த், தீபா வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘யார் யாரிவள்’ இன்று வெளியாகி உள்ளது. மோகன் ராஜன் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

படம் குறித்த மற்ற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com