

ஹைதராபாத்தில் நடைபெற்ற 'பெத்தி' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி விழாவில் நடிகர் ராம் சரண் ஒரு சுவாரஸ்யமான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
படம் வெளியாவதற்கு முன்பு வரை ராம் சரணை 'நானா' என்று அழைத்து வந்த அவரது மகள் கிளின் காரா, இப்போது அவரை 'பெத்தி' அல்லது 'பெத்தி நானா' என்று அழைக்கத் தொடங்கியுள்ளாராம்.
திரையரங்குகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தன்னை 'ராம் சரண்' என்று கூப்பிடாமல் 'பெத்தி' என்று அன்போடு அழைப்பது நெகிழ்ச்சியாக உள்ளது என்றும், இந்த வெற்றி தனக்கு மிகவும் ஸ்பெஷலானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் ராம் சரணின் தந்தை சிரஞ்சீவி, இயக்குனர் புச்சி பாபு சனா மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.