ரஜினியுடன் மீண்டும் இணையும் பகத்பாசில்-கூலி பட அப்டேட்

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பகத் பாசிலுக்கு மவுசு அதிகரித்துள்ளது. ஆவேசம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை பெற்றது.
ரஜினியுடன் மீண்டும் இணையும் பகத்பாசில்-கூலி பட அப்டேட்
Published on

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். படத்தில் அமிதாப்பச்சன், பகத்பாசில், துஷாரா விஜயன், மஞ்சுவாரியர் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற அக்டோபர் 10-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

அடுத்ததாக ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கியது.

முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்துள்ள பகத்பாசில் 'கூலி' படத்திலும் ரஜினியுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

இதையொட்டி படக்குழுவினர் பகத்பாசிலிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தில் பகத்பாசிலின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பகத்பாசிலுக்கு மவுசு அதிகரித்துள்ளது. மலையாளத்தில் தயாராகி பகத்பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை பெற்றது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com