இன்னும் கொஞ்சம் நாட்களில் ரிலீஸ்.. புது அப்டேட் கொடுத்த ராஜாகிளி படக்குழு

சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார்.இந்தப் படத்தை உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.
இன்னும் கொஞ்சம் நாட்களில் ரிலீஸ்.. புது அப்டேட் கொடுத்த ராஜாகிளி படக்குழு
Published on

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் தம்பி ராமையா. ஏற்கனவே சமுத்திரகனி மற்றும் தம்பி ராமையா இணைந்து சாட்டை, அப்பா, வினோதய சித்தம் போன்ற படங்களில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் ராஜாகிளி என்ற புதிய படத்தில் சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா இணைந்து நடித்துள்ளனர். 'மாநாடு', 'கங்காரு', 'மிகமிக அவசரம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் கதையின் நாயகனாக சமுத்திரக்கனியும், கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், பழ.கருப்பையா, ஆடுகளம் நரேன், பிரவின்.ஜி, இயக்குனர் மூர்த்தி, 'கும்கி' அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், தீபா, பாடகர் கிரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கதை, வசனம், திரைக்கதை, பாடல் வரிகள் மற்றும் இசையமைப்பாளராக தம்பி ராமையா பணியாற்றியுள்ளார். இந்தப் படத்திற்கு கேதர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜாகிளி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, பிறகு இதன் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ராஜாகிளி திரைப்படம் வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. மேலும், படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com