எம்புரான் படத்தின் பட்ஜெட் என்ன? வேற லெவல் பதில் அளித்த பிருத்விராஜ்

இந்தப் படம் மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. எம்புரான் படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது.
எம்புரான் படத்தின் பட்ஜெட் என்ன? வேற லெவல் பதில் அளித்த பிருத்விராஜ்
Published on

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு ' L2 எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

எம்புரான் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜ் படத்தின் பட்ஜெட் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், "நாங்கள் இந்தப் படத்தின் பட்ஜெட்டை அறிவிக்கவே இல்லை. நீங்கள் இந்தப் படத்தை பார்க்கும் போது, பட்ஜெட் எவ்வளவாக இருக்கும் என்று நினைக்கின்றீர்களோ அதுதான், இந்தப் படத்தின் பட்ஜெட். ஆனால், அது நிச்சயம் நீங்கள் நினைப்பதை விட நிச்சயம் அதிகமாகவே இருக்கும். இது தான் மலையாள சினிமா," என்று கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com