மீண்டும் 'பிரேமம்' மேஜிக்.. நிவின் பாலியின் 50வது படத்தை இயக்கும் அல்போன்ஸ் புத்திரன்

கடைசியாக , நிவினுடன் சர்வம் மாயா, வாழ 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
மீண்டும் 'பிரேமம்' மேஜிக்.. நிவின் பாலியின் 50வது படத்தை இயக்கும் அல்போன்ஸ் புத்திரன்
Published on: 

2015 இல் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் பிரேமம்.

மலையாள சினிமா மட்டுமின்றி, தென்னிந்திய சினிமாவிலேயே தனி கிளாசிக் அந்தஸ்து இப்படத்திற்கு உண்டு. சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் ஆகியோரை திரையுலகிற்கு தந்த படமும் இதுவே.

நிவின் பாலியை வெகுஜன ஹீரோவாக ஸ்தாபித்த படமும் பிரேமமே. இந்நிலையில் 11 ஆண்டுகள் கழித்து அல்போன்ஸ் புத்திரன் - நிவின் பாலி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இடையில் பிருத்விராஜ், நயன்தாராவை வைத்து ‘கோல்டு’ என்ற படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார்.

மேலும் அண்மைக்காலமாக நடிகராகவும் அல்போன்ஸ் வளம் வருகிறார். கடைசியாக , நிவினுடன் சர்வம் மாயா, வாழ 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் இயக்குனராக களமிறங்கியுள்ள அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.

படத்தின் பெயர் வருகிற ஜூன் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இது, நிவின் பாலியின் 50வது படம் ஆகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com