கம்பேக் கொடுத்த பிரசாந்த் & சிம்ரன் ஜோடி - மக்களின் ஆதரவை பெறும் அந்தகன்

தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன்.படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார்.
கம்பேக் கொடுத்த  பிரசாந்த் & சிம்ரன் ஜோடி - மக்களின் ஆதரவை பெறும் அந்தகன்
Published on

தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன். படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார்.

சிம்ரன், பிரியா ஆனந்த் ,மனோபாலா சமுத்திரகனி, ஊர்வசி யோகி பாபு ,வனிதா விஜயகுமார் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் இன்று வெளியாகியது. பார்த்த மக்கள் அனைவரும் நல்ல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் பிரசாந்திற்கு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. சிம்ரன் மற்றும் ஊர்வசியின் நடிப்பு அபாரம்.

அந்தாதூன் என்ற இந்தி திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தை சிறப்பாக அந்த உண்மை கதையின் சாயலை இழக்காமல் ரீமேக் செய்ததிற்கு படக்குழுவிற்கு பாராட்டுகள். படக்குழு இன்று காலை ரோகினி தியேட்டரில் ரசிகர்களுடன் படத்தை பார்த்தனர்.

அதன் பிறகு பிரசாந்த், சிம்ரன் மற்றும் படக்குழுவினர் கமலா திரையரங்கில் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் சங்கத்திற்காக திரையிடப்பட்ட சிறப்பு காட்சியில் கலந்துக் கொண்டனர். அதில் பேசிய பிரசாந்த் படத்தை காண வந்த அனைவருக்கும் நன்றி எனவும், படக்குழு மற்றும் நடிகை நடிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். தன் அப்பாவும் படத்தின் இயக்குனரான தியாகராஜாவுக்கு நன்றி தெரிவித்தார்..

எழுத்தாளர் மற்றும் இயக்குனர் சங்கத்தில் இருக்கும் நபர்களை அவரது குடும்பம் என்று சுட்டிக்காட்டினார். வரும் நாட்களில் திரைப்படம் வெகு மக்கள் வந்து பார்க்கும் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com