பிரபுதேவாவின் ஜாலியோ ஜிம்கானா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார்.தற்பொழுது படத்தின் ரிலீச் தேதியை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிரபுதேவாவின் ஜாலியோ ஜிம்கானா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

பிரபு தேவா கடைசியாக நடித்து வெளியான பேட்ட ராப் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. திரைப்படம் வணிக ரீதியாகவும் பெரிய வசூலை பெறவில்லை.

இதைத்தொடர்ந்து முசாசி, ஃபளாஷ் பேக், வுல்ஃப் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமான ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது, படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

இப்படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். இவருடன் அபிராமி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், சாய் தீனா, யாஷிகா ஆனந்த் மற்றும் மதுசுதன் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாடலான `போலிஸ் காரனா கட்டிக்கிட்டா' பாடல் ஆண்டிரியாவின் குரலில் டபுள் மீனிங் வரிகளுடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது படத்தின் ரிலீச் தேதியை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழை வழங்கியுள்ளது என்பது குறிப்படத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com