சாண்ட்விச்சிற்குள் சிக்கிய பிரபு தேவா - வித்தியாசமான ஜாலியோ ஜிம்கானா ஃபர்ஸ்ட் லுக்

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமான ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்துள்ளார்.சக்தி சிதம்பரத்துடன் இணைந்து பிரபு தேவா மூன்றாம் முறை பணியாற்றியுள்ளார்.
சாண்ட்விச்சிற்குள் சிக்கிய பிரபு தேவா - வித்தியாசமான ஜாலியோ ஜிம்கானா ஃபர்ஸ்ட் லுக்
Published on

பிரபு தேவா தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து பல படங்களை லைன் அப்பில் வைத்துள்ளார்.

முசாசி, பேட்ட ராப், ஃபளாஷ் பேக், வுல்ஃப் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமான ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது, தற்பொழுது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரபு தேவா சாண்டிவிச்சிற்குள் இருக்கிறார், அந்த சாண்ட்விச்சை படத்தின் பெண் கதாப்பாத்திரங்கள் தூக்கி செல்கின்றனர்.

சக்தி சிதம்பரத்துடன் இணைந்து பிரபு தேவா மூன்றாம் முறை பணியாற்றியுள்ளார். இதற்கு முன் சார்லி சாப்லின்2002 , சார்லி சாப்லின்-2 2019 என்ற படங்களில் நடித்துள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். இவருடன் அபிராமி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், சாய் தீனா, யாஷிகா ஆனந்த் மற்றும் மதுசுதன் நடித்துள்ளனர்.

இப்படத்தில் பிரபு தேவா படம் முழுக்க ஒரு பிணமாக நடித்துள்ளார், தென்காசியை சேர்ந்த குடும்பம் இந்த பிணத்தை கொடைக்கானலில் சேர்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனை அவர்கள் எவ்வாறு செய்தார்கள் என்பதை மிகவும் நகைச்சுவை நிறைந்த கதைக்களமாக இயக்கியுள்ளார்.

படம் விரைவில் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com