தள்ளிப்போன 'புஷ்பா 2' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பாபு-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.
தள்ளிப்போன 'புஷ்பா 2' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Published on

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர். புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பாபு-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் படம் வெளி வருவதில் தாமதம் ஏற்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com